?LIVE: மாண்டஸ் புயல் எதிரொலி - அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக 9ம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் படிப்படியாக நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை கழகத்தில் நடக்கயிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 9ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு