நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் எப்போது..? தேதி அறிவிப்பு!
நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அம்மாவட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழை நின்ற பிறகும் வெள்ளம் வடியாத காரணத்தால் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் அரையாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.
தேதி அறிவிப்பு
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
அதில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.