உடலை எரித்தது உறுதியானது; பிரேத பரிசோதனை ரிப்போர்ட் - ஜெயகுமார் விவகாரத்தில் திருப்பம்!
ஜெயக்குமார் கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயக்குமார் வழக்கு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவர் எழுதியதாக 2 கடிதங்கள் சிக்கியது.
அதில் அவர் தற்கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுத்துள்ளார்.
புதிய திருப்பம்
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ஜெயக்குமார் நுரையீரலில் தண்ணீர் இல்லை, திரவம் எதுவும் இல்லை. அதேபோல் தொண்டை மொத்தமாக எரிந்து உள்ளது. குரல்வளையை இல்லை.
இது எல்லாம் பொதுவாக ஏற்கனவே ஒருவர் இறந்து அவரை எரியூட்டினாள் மட்டுமே நடக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இது தற்கொலையாக இருக்காது. ஏனென்றால் இதில் கண்டிப்பாக இன்னொரு நபர் இல்லாமல் உடலை எரியூட்ட முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
மறுபுறம் ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயக்குமாருக்கு பணம் கொடுத்தவர்கள் கூலிப்படை வாயிலாக, யாரோ கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.