Play Boy... வேலைக்கு ஆட்கள் தேவை - நூதன போஸ்டரால் பரபரப்பு!

Uttarakhand Viral Photos
By Sumathi Sep 18, 2022 10:18 AM GMT
Report

 ப்ளே பாய் வேலைக்கு ஆட்கள் தேவை என நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

ப்ளே பாய் போஸ்டர்

உத்தரகண்ட், டேராடூன் மாவட்டங்களில் உள்ள கோட்வார் நகர் முழுவதும் ஒரே நாள் இரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், ப்ளே பாய் வேலைகளுக்கு ஆட்கள் தேவை..

Play Boy... வேலைக்கு ஆட்கள் தேவை - நூதன போஸ்டரால் பரபரப்பு! | Posters Of Playboy Jobs Uttarakhand

எஸ்கார்ட் நிறுவனத்தில் சேருவதன் மூலம் சிறுவர்கள் தினசரி ரூ. 5,000-10,000 சம்பாதிக்கலாம் என்றும், இதற்கு விருப்பப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள செல்போன் எண் ஒன்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கோட்டுவார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

பரபரப்பு 

மேலாக, போலீஸ் நிலைய வளாகத்திலும் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்த சுவரொட்டிகள் பற்றி அங்குள்ள மக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

நாங்கள் போஸ்டரில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கு கால் செய்தோம். ஆனால், அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, விசாரணையை தொடங்கி உள்ளோம். அந்த மொபைல் எண் கடைசியாக எங்கு இருந்தது என கண்டுபிடிக்க முயன்றோம்.

காவல்துறை விசாரணை  

அது டெல்லி - ஹரியானா எல்லையில் இருந்தது” என்றார். மேலும், கோட்வார் இன்ஸ்பெக்டர் விஜய் சிங் கூறுகையில், "இதுவரை யாரும் இந்த விவகாரத்தில் புகார் அளிக்கவில்லை.

இருப்பினும், நாங்கள் தானாக முன்வந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கண்டுபிடித்து. அவர்களை கைது செய்வோம்" என்றார்.