வருங்கால முதல்வர் புஸ்சி ஆனந்த் - போஸ்டரால் பதறிய தொண்டர்கள்!
வருங்கால முதல்வர் பொதுச்செயலாளர் ஆனந்த் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் நடக்கும் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையம் முழுவதும் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
இதில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்கவுள்ளார்.
போஸ்டரால் பரபரப்பு
இந்நிலையில், சென்னை ஈ.சி.ஆரில் ஒட்டப்பட்ட போஸ்டரில் மதிப்புமிகு தளபதி அவர்களை பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசாம் தவெக பொதுச்செயலாளர்.. வருங்கால தமிழக முதல்-அமைச்சர் அவர்களே வருக! வருக!! வருக!!! என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தற்போது இதுகுறித்து தவெக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கூறுகையில், "அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
வேறு கட்சியை சார்ந்தவர்கள் யாராவது இதை செய்து இருக்கலாம் வேண்டும் என்றே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். முதுகில் குத்தும் வகையில் இப்படி செய்துள்ளனர்" என விளக்கமளித்துள்ளார்.