தமிழகத்தின் செல்ல பிள்ளை... நாளைய முதல்வரே : விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Vijay
By Irumporai Dec 05, 2022 04:52 AM GMT
Report

நடிகர் விஜய் சினிமாவிற்கு நடிக்க வந்து நேற்றோடு 30 ஆண்டுகள் முடிவடைந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஓட்டி கொண்டாடினார்.

விஜய் 30 

அந்தவகையில் தேனியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது கவனம் பெற்றுள்ளது, அதில் அரசியல் கட்சிகள் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு அழைப்பது போன்ற பல்வேறு அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தின் செல்ல பிள்ளை... நாளைய முதல்வரே : விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு | Poster Of Actor Vijay Fans

போஸ்டரால் பரபரப்பு 

அதில் தமிழக மக்களின் பேராதரவோடு 30 ஆண்டுகள் சினிமாவில் வெற்றி. அடுத்த 30 ஆண்டு அரசியல் வெற்றி. முதல்வராக தமிழக மக்களின் பேராதரவோடு எதிர்பார்ப்பு. அரசியல் கட்சிகளுக்கு. கூட்டணி அழைப்புக்கு தளபதியாரின் தலைமையில் தயாராகுங்கள்.

வெற்றிடத்தை நிரப்ப வரும் தமிழகத்தின் செல்ல பிள்ளை எங்கள் முதல்வரே. இன்று சினிமாவில் தளபதி. நாளைய தமிழகத்தின் முதல்வரே இன்றைய இளைஞர்களின் கனவு முதல்வரே.

தமிழக மக்களின் கனவை நினைவாக்க வரும் நாளைய தமிழக முதல்வரே என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களிலும் தேனியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.