கிளம்பு கிளம்பு அந்துபோச்சு - கரூரில் ஒட்டப்பட்ட செந்தில் பாலாஜியின் போஸ்டர்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்டரால் பரபரப்பு
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட விடாமல் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை வைத்து சிங்கத்தின் அருகில் அமர்ந்து இருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் அருகே கிளம்பு கிளம்பு அந்து போச்சு, இது காலக்கில்லா இங்கு இருந்து ஒரு படி மண்ண கூட எடுத்துச் செல்ல முடியாது என்று கரூர் மாநகர் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் சுவற்றில் போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.