நீதிபதி முன்னிலையில் தூத்துக்குடி வாலிபர் பிரேத பரிசோதனை

Thoothukudi
By Fathima Jul 24, 2026 05:23 AM GMT
Report

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 24).

சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கூறி கடந்த 17ம் தேதி போலிசார் அருணாச்சலத்தை கைது செய்து தென்பாகம் போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தயார் செய்து கொண்டிருந்த போது, மயங்கி விழுந்ததாக போலிஸ் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது தலையில் காயம் ஏற்பட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீதிபதி முன்னிலையில் தூத்துக்குடி வாலிபர் பிரேத பரிசோதனை | Post Mortem Thoothukudi Youth Body Conducted

போலிஸ் நிலையத்தில் அருணாச்சலத்தை தாக்கியதே அவரது மரணத்துக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதன்படி இன்று காலை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது, வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.