இனி கமிஷன் அடிக்க முடியாது - டிஜிட்டலாகும் டாஸ்மார்க்
டாஸ்மார்க் கடைகளில் 10 ரூபாய் அதிகமாக மதுவிற்கு கேட்பதாக குடிமகன்கள் புகார் அளித்து யாரும் நிலையில், அதனை தடுத்திட டாஸ்மார்க் நிர்வாகம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது
10 ரூபாய் கமிஷன்
டாஸ்மார்க் கடைகளில் பாட்டிலின் MRP விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பல கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாகவும் மதுப்பிரியர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர்.
டிஜிட்டலாகும் டாஸ்மார்க்
இந்நிலையில் இதனை தடுத்திட ஸ்வைப் மெஷின்கள் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளையோ அல்லது மொபைல் மூலம் ஸ்கேன் செய்து பாட்டிலுக்கு உரிய கட்டணத்தை செலுத்த வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த கமிஷன் பிரச்சனை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.