வந்தாச்சு புது method - இனி கோவை'ல் ஈஸியா கரண்ட் பில் கட்டலாம்
இனி கொங்கு மண்டலங்களில் கரண்ட் பில் கட்ட PoS இயந்திரங்கள் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
EB Bill
பெரும்பாலும் லைன்னில் நின்று மின்வாரிய கட்டணத்தை கட்ட பயனாளிகள் சிரமப்படுவதால் மின்வாரிய துறையில் பல நவீன அறிமுகங்கள் தொடர்ந்து கொண்டுவரப்பட்டன.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் PoS பயன்படுத்தி மின்கட்டணம் காட்டும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த சேவையை கொங்கு மண்டலத்திலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவையில் அறிமுகம்
இந்த சேவை கோவை மண்டலத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மெட்ரோ, உடுமலைப்பேட்டை, திருப்பூர், பல்லடம், நீலகிரி என 7 பகுதிகளின் கட்டண வசூல் மையங்கள் இருக்கின்றன. வங்கி பணப்பரிமாற்றம் அதிகம் நடைபெறும் சூழலில் வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
இதன் மூலமாக பல இன்னல்களை பொதுமக்கள் தவிர்க்க முடியும் என்ற காரணத்தினால் தற்போது, இந்த திட்டம் கொங்கு மண்டலத்திலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.