ஆபாச வீடியோ காலில் சிக்கிய காவல் ஆய்வாளர் - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

chennai Pornography video call arrest
By Anupriyamkumaresan Oct 03, 2021 09:35 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி, இவருக்கும் நெல்வாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு முஸ்லீம் மதப்படி திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அன்சாரியின் மனைவி திருக்கழுக்குன்றம் அருகே நெல்வாய் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆபாச வீடியோ காலில் சிக்கிய காவல் ஆய்வாளர் - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் | Pornography Video Call Inspector Arrest Chennai

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அஷ்ரப் அன்சாரி அவரது மனைவியின் செல்போனை பரிசோதித்தபோது அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அஷ்ரப் அன்சாரி அவரது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் செல்போனில் மற்றொருபுறம் பேசி வரும் நபர் குறித்தும் விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் அஷ்ரப் அன்சாரியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்தது செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மனைவியின் செல்போனில் இருந்த காவல் ஆய்வாளர் முனிசேகரின், அந்தரங்க புகைப்படங்களை சேகரித்த கணவர் அஷ்ரப் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் முனிசேகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச வீடியோ காலில் சிக்கிய காவல் ஆய்வாளர் - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் | Pornography Video Call Inspector Arrest Chennai

இதுகுறித்து காவல்துறையினரிடம் பேசிய போது , சென்னையை சேர்ந்த ஒருவர் காவல்துறை தலைவர், வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர், காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர், மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இணைய வழியாக ஒருவர் புகார் அளித்துள்ளார். அளிக்கப்பட்ட புகாரில் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த ஆய்வாளர் தனது மனைவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய உயரதிகாரிகள் தற்போது அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். தற்பொழுது காவல் ஆய்வாளர் அரை நிர்வாணத்துடன் வீடியோ காலில் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.