பணப்பட்டுவாடா குறித்து ஆபாச பேச்சு - திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு
தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் கொளுத்தும் வெயில் என்று கூட பார்க்காமல் அனல் தெறிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. பிரச்சாரத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே பிரச்சாரத்தில் போட்டி கடுமையாக நிலவியது.
இந்த முறை பிரச்சாரங்கள் எல்லை மீறி சென்று விட்டது என்றே சொல்ல வேண்டும். ஒருவரையொருவர் குறை கூறிகொண்டு சர்ச்சையாக பேசி பரப்புரை நிகழ்த்தியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றோடு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை நிறைவு செய்தன. இதனையடுத்து நாளை தேர்தல் என்பதால் அதற்கான பணியில் மும்முரமாக செயலாற்றி வருகின்றன.

இந்நிலையில், கே.என்.நேரு பணப்பட்டுவாடா குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வீடியோவில் கே.என்.நேரு ஆபாசமாக பேசியிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நாளை நடக்கவிருக்கும் சூழலில் அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் சர்ச்சையில் சிக்குவதால் திமுக தலைமை மிகவும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.