ஆபாச இணையதளங்கள் முடக்கம் - பிரான்ஸ் அரசு அதிரடி

France Freeze Porn Videos
By Thahir Sep 08, 2021 04:18 AM GMT
Report

 பிரான்ஸில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகள் ஆபாச இணையதளங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுவர்களின் வாழ்வுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்கவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

உலகிலுள்ள பல்வேறு நாடுகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சிலும் இது விரைவில் வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆபாச இணையதளங்கள் முடக்கம் - பிரான்ஸ் அரசு அதிரடி | Porn Videos Freeze France

ஏனெனில் பிரான்சில் மிகவும் குறைந்து வயது கொண்ட சிறுவர்களை இது போன்ற இணையதளங்கள் பெரிதும் பாதிக்கின்றதனால் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக e-Enfance மற்றும் Voix de l'Enfant போன்ற குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஆபாச இணையதளங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி Orange, SFR, Bouygues Télécom, Free, Colt Technologies Services மற்றும் Outre mer Télécom போன்ற இணையதள உரிமையாளர்களிடம் இதனை முடக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

எனினும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இதனை மேற்கொள்ள முடியாது என்றும்m அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் வரும் 9 ஆம் திகதி முதல் ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று Tribunal judiciaire de Paris தெரிவித்துள்ளது. அதில் Pornhub, Youporn, Xvideos, RedTube போன்ற இணையதளங்களும் முடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.