உள்ளாடைகளைத் திருடி சென்ற இளைஞர்.. ஆபாச படங்களுக்கு அடிமையான கொடூரம் - பகீர் பின்னணி!
ஆபாச படங்களுக்கு அடிமையான இளைஞர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவின் தும்குரு மாவட்டத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஷரத் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் சில மாணவிகள் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.இதுகுறித்து உடனே தங்களின் வீட்டு உரிமையாளர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அந்த வீட்டின் உரிமையாளர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் ஷரத், அந்த மாணவிகளின் வீட்டின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதும், உள்ளாடைகளைத் திருடுவதும் பதிவாகியிருந்தனர்.
இளைஞர்
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷரத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினர்.
விசாரணையில் இளைஞர் ஷரத் ஆபாச படங்களுக்கு அடிமையானது தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஷரத் காவல்துறையால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.