பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!
பிரபல யூடியூபர் ஒருவர் நிகழ்ச்சியைப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல யூடியூபர்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி போல், யூடியூப் பிரபலங்கள் இணைந்து India's Got Latent என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் அல்லாபாடியா, அஷிஷ் சன்சலானி, ஜாஸ்பிரீத் சிங், அபூர்வா மகிஜா, சாமே ரெய்னா உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் நடுவர்களான உள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணிடம்பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா "உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?
சர்ச்சை
அல்லது அதைப் பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்தடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப்பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து India's Got Latent நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் தரக்குறைவான விவாதத்தில் ஈடுபட்டதாக இவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் யூடியூபர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.