‘‘மன்னிசுடுங்க சின்ன தப்பாயிடுச்சு’’ : மன்னிப்பு கேட்ட ட்விட்டர் நிறுவனம் காரணம் என்ன?

socialmedia twitterdown
By Irumporai Feb 12, 2022 03:36 AM GMT
Report

 பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சேவை உலகம் முழுவதும் நேற்று முடங்கியது.குறிப்பாக,இந்தியாவிலும் பல பயனர்களுக்கு ட்விட்டர் சேவை முடங்கியதாக தெரிய வந்துள்ளது.

  குறிப்பாக,இந்திய நேற்று இரவு 10.43 மணிக்கு ட்விட்டர் முடங்கியதாகத் தகவல் வெளியாகியது. அதாவது இதனை கண்காணிக்கும் டவுண்டிடெக்டர் வெளியிட்டிருக்கும் தகவலின்படி,அமெரிக்காவில் 40,000 பயனர்,இந்தியாவில், 2,018 பயனருக்கும் மேற்பட்டோர் என பலரும் ட்விட்டர் கணக்கு முடங்கியதாகதெரிவித்துள்ளது.

ட்விட்டர் பயனர்களுக்கு நேற்று முகப்பு பக்கம் வந்தாலும்,ரீ ட்வீட் அல்லது பிறரின் ட்வீட்டை படிப்பது போன்ற அடிப்படை அம்சங்களை பயன்படுத்த முடியாமல் போனது.இதற்கு சர்வர் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ட்விட்டரில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப பிழை சரி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,வலைதளம் முடங்கியதற்கு ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பும் கோரியது.

இது தொடர்பாக,ட்விட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறுகையில்: “நாங்கள் ஒரு தொழில்நுட்ப பிழை சரி செய்துள்ளோம்.தற்போது மீண்டும் ட்விட்டர் இயல்பு நிலைக்கு வந்துள்ளது.சிரமத்திற்கு மன்னிக்கவும்”,என்று தெரிவித்துள்ளது.