மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சோகத்தில் ரசிகர்கள்

By Irumporai Feb 04, 2023 09:07 AM GMT
Report

பழம் பெரும்  பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம் (78). வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சோகத்தில் ரசிகர்கள் | Popular Playback Singer Vani Jayaram Passed Away

1971 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். குடியரசு தினத்தை ஒட்டி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.