’இந்திய அரசை காணோம்’ பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படம் இணையத்தில் வைரல்

india viral outlook
By Irumporai May 13, 2021 01:00 PM GMT
Report

இந்திய அரசைக் காணவில்லை என பிரபல அவுட்லுக் பத்திரிக்கை தங்கள் முதல் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

கொரோனா முதல் அலைக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை குறைந்த போது ’கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகநாடுகளுக்கு முன்னோடியாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் ஆளும் பாஜக பெருமையாக பேசிக் கொண்டது.

ஆனால் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இந்தியர்களை வாட்டி வதைக்கிறது. முதல் அலையில் ஏற்பட்ட பலி மற்றும் பாதிப்புகளை விட இரண்டாம் அலையில் பாதிப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது.

குறிப்பாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இடபாற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் இந்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என ஊடகங்களும், எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஊடகமான அவுட்லுக் பத்திரிக்கை தங்கள் புத்தகத்தின் முகப்பில் இந்திய அரசைக் காணவில்லை என்று புகைப்படம் வெளியிட்டுள்ளது.

’இந்திய அரசை காணோம்’ பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படம் இணையத்தில் வைரல் | Popular Magazine India Goes Viral On The Internet

அதில் ‘பெயர்: இந்திய அரசு, வயது :7 ஆண்டுகள், தெரிவிக்கவேண்டிய நபர் : இந்திய குடிமக்கள்’ எனக் கூறியுள்ளது.