பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் 60 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..!
சென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் 60 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள பரகத் எனும் தங்கும் விடுதியில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகள் 7200266244 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சையும், உணவும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக 6 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பில் உள்ளதாகவும், 4 மருத்துவர்கள் மற்றும் 8 செவிலியர்கள் பணியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.