பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

By Irumporai Sep 28, 2022 02:23 AM GMT
Report

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதன் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடந்திருந்தது.

என்ஐஏ சோதனை தொடர்ந்து டெல்லி, குஜராத், அசாம் உள்ள எட்டு மாநிலங்களில் மாநில போலீசாரம் பிஎஃப்ஐ அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை | Popular Front Of India Banned For 5 Years

தேசிய விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் பல போராட்டங்களை நடத்தியது வன்முறையான மற்றும் மதக்கலவரங்களை தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீது வைக்கப்படுகிறது.

அமைப்புக்கு தடை 

இதன் மூலம் தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது , ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் மிட்டது என பல்வேறு செயல்களுக்கான ஆதாரங்கள் இரண்டு கட்டங்களாக நடத்த சோதனைகளில் கிடைத்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது.  

இந்த நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்துள்ளது.