பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் காலமானர்
பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் மாரடைப்பு காரணமாக காலமானார்.
கெளஷிக் காலமானர்
பிரபல தமிழ் சினிமா விமர்சகர் மற்றும் தொகுப்பாளராக வலம் வந்தவர் கௌஷிக். தனியார் ஊடகங்களில் பணிபுரிந்து வந்த இவர் சினிமா விமர்சகராகவும், சினிமா ட்ராக்கர் அறியப்பட்டவர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த இவர் நேற்று மதியம் மாரடைப்பால் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் சினிமா மீது ஆன ஆர்வத்தினால் அத்துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பு முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார்.
பிரபலங்கல் இரங்கல்
இவரது மரணம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌஷிக் மரணத்திற்கு மறைவுக்கு தனுஷ்,ராகவா லாரன்ஸ் ,துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ், வெங்கட் பிரபு உள்ளிட்டோ தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் படம் குறித்த தனது விமர்சனத்தை பதிவுசெய்த கௌஷிக் , இறப்பதற்கு முன்பு கூட படம் உலகளவில் 50 கோடி வசூலித்ததாக ட்வீட் செய்திருந்திருந்த நிலையில் கௌஷிக்கின் திடீர் மரணம் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.