அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் பிரபல நடிகை

actress election support aiadmk
By Jon Mar 17, 2021 03:34 PM GMT
Report

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா முதல்கட்டமாக நாளை முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நாளை (18-ந்தேதி) மாலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அவர் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

பின்னர் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 19ம் தேதி மாலையில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

20-ந்தேதி (சனி) காலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, பழனி ஆகிய பகுதிகளிலும், மாலையில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் பிரபல நடிகை | Popular Actress Support Aiadmk Candidate

21-ந்தேதி காலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி பகுதிகளிலும், மாலையில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.