பிரபல நடிகர் உயிரிழப்பு - திரையுலகினர் அதிர்ச்சி..!

Kerala
By Thahir Jul 30, 2022 04:29 AM GMT
Report

பிரபல நடிகர் சரத் சந்திரன் உயிரிழந்த சம்பம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் உயிரிழப்பு 

மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன் 37 வயதான இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.

திரைப்படத்திற்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர் ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் பிரபலமானார்.

Kerala Cinema

கேரள மாநிலம் கொச்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.இவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற சகோதரரும் உள்ளார்.

இந்நிலையில் நேற்று சரத் சந்திரன் உயிரிழந்தார்.அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரின் மரணம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கமலி டைரிஸ் படத்தில் அவருடன் நடித்த ஆண்டனி வர்க்கீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் RIP Brother என அவருடைய போட்டோக்களை பதிவேற்றியுள்ளார்.

அனீஸியா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சரத் சந்திரன், ஒரு மெக்ஸிகன் அபரதா, சிஐஏ:கம்ரேட் இன் அமெரிக்கா, கூடி, மற்றும் ஒரு தாத்வீக அவலோகனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.