3 தோட்டாக்கள் அடங்கிய கடிதம்.. போப் பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல்!

letter Vatican PopeFrancis threepistolbullets
By Irumporai Aug 10, 2021 12:09 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

போப் பிரான்சிஸ்க்கு வந்த கொலை மிரட்டல் குறித்து இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்டிகனில் உள்ள போப் பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல் கடித உறை ஒன்று வந்துள்ளது. அதில் மூன்று தோட்டாக்களும் ஒரு கடிதமும் உள்ளதாக மிலனில் இருக்கும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த கடிதமானது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது  இது குறித்து இத்தாலிய காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி அந்த கடிதத்துடன் மூன்று தோட்டாக்கள் ஒரு கடிதம் இருந்ததகாவும் அந்த கடிதத்தில் வாட்டிகனின் நிதி செயல்பாடுகளை குறித்து எழுதபட்டிருந்ததாக  கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்தவித தகவலையும் வாட்டிகன் நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.