"போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க தயாராக இருக்கிறேன்" - போப் பிரான்சிஸ்
உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின்பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உக்ரைன் போப் பிரான்சிஸ் கூறுகையில், “போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க நான் மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். இதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பினேன்.
எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதின் இந்த நேரத்தில் சந்திப்பை நடத்த விரும்பவில்லை என தெரிகிறது.
நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.