ஓரினசேர்க்கையர்கள்..மோசமான வார்த்தையால் திட்டிய போப் ஆண்டவர் - வெடித்த சர்ச்சை!

Pope Francis Italy LGBTQ Vatican
By Swetha Jun 12, 2024 08:29 AM GMT
Report

போப் ஆண்டவர் ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து வசைமொழி பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.

ஓரினசேர்க்கை 

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ளது இந்த புனித நகரமான வாட்டிகன். இந்த திருச்சபையில் கடந்த மே மாதம் பிஷப்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் இத்தாலிய வசை மொழியான புரோசியாஜினே என்ற வார்த்தையை போப் பிரான்சிஸ் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஓரினசேர்க்கையர்கள்..மோசமான வார்த்தையால் திட்டிய போப் ஆண்டவர் - வெடித்த சர்ச்சை! | Pope Francis Said Bad Word About Homosexuals

Frociaggine என்ற இந்த வார்த்தை ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும். அதாவது இந்த வார்த்தை இயற்கையை மீறிய மயக்கம் என்று அர்த்தம். இது ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது. பிஷப்களிடம் போப் உரையாடும்போது, வாட்டிகனில் Frociaggine காற்று வீசி வருகிறது,

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது என்று பேசியுள்ளார். ஓரினச்சேர்க்கையாளர்களை செமினரியங்களாக அனுமதிக்கலாமா என்ற விவாதத்தின்போது போப் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது.

போப் ஆண்டவருக்கு கிரீடம் அணிவித்த பழங்குடி மக்கள்

போப் ஆண்டவருக்கு கிரீடம் அணிவித்த பழங்குடி மக்கள்

போப் ஆண்டவர் 

இந்த நிலையில், இத்தாலிய ஊடகங்களில் இவர் பேசிய இந்த விவகாரம் பேசுபொருள்ளாகியுள்ளது .முன்னதாக இதே வசைமொழியை போப் பயன்படுத்தியதில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்கு அவர் கடந்த மாதம் மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்.

ஓரினசேர்க்கையர்கள்..மோசமான வார்த்தையால் திட்டிய போப் ஆண்டவர் - வெடித்த சர்ச்சை! | Pope Francis Said Bad Word About Homosexuals

இந்த சூழலில் தான் அவர் மீண்டும் இந்த வசைமொழியை பயன்படுத்தியது பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், 87 வயதாகும் பிரான்சிஸ் கடந்த 11 ஆண்டு காலமாக திருத்தந்தையாக உள்ள நிலையில் LGBT சமூகத்துக்கு எதிரான பார்வையை கொண்டுள்ளார் என்று விமர்சிக்கப்படுகிறார். இதற்கிடையில் பிறப்பால் அர்ஜென்டைன் நாட்டவரான போப் பிரான்சிஸ், இத்தாலிய வசைமொழியின் உள்ளர்த்தம் தெரியாது பேசியுள்ளார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.