மனித கண்ணியமும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகிறது : வாடிகனில் போப் பிரான்சிஸ் வருத்தம்

Christmas Pope Francis
By Irumporai Dec 25, 2022 02:14 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நல்லதை செய்யாமல் இந்த கிறிஸ்துமஸை கடந்து செல்ல வேண்டாம் என போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இயேசு பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது , அந்த வகையில் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸில் தலைமையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது.

மனித கண்ணியமும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகிறது : வாடிகனில் போப் பிரான்சிஸ் வருத்தம் | Pope Francis Message To World On Christmas

முன்னதாக சக்கர நாற்காலியில் வந்த போப் பிரான்ஸிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 7ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கூடியிருந்த அரங்கில், குழந்தை இயேசுவின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஏசு கிறிஸ்து ஏழையாக பிறந்தார்

அப்போது விழாவில் பேசிய போப் பிரான்சிஸ் விழாவில் பேசிய போப், மனிதர்கள் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் தங்கள் சகோதர சகோதரிகள், உற்றார்களை கூட சுரண்ட பார்க்கின்றனர். எத்தனை போர்களை மனிதர்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.

இன்று கூட பல இடங்களில் பல்வேறு இடங்களில் மனித கண்ணியமும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகிறது.

ஏசு கிறிஸ்து ஏழையாக பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாகவே உயிர்துறந்தார். எனவே,பிறருக்கு நல்லதை செய்யாமல் யாரும் இந்த கிறிஸ்துமஸைக் கடந்து செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார்