"ஆப்கானிஸ்தானின் நிலை வருத்தமளிக்கிறது" - போப் பிரான்சிஸ்

Afghanistan Pope Francis Taliban
By Thahir Aug 16, 2021 09:37 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை குறித்து போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இறுதியாக, காபூல் நகரையும் நேற்று கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலிபான்களின் கலவரத்தில் மாட்டிக்கொண்ட ஆப்கானிஸ்தான் தொடர்பில் போப் பிரான்சிஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். 

"ஆப்கானிஸ்தானின் நிலை வருத்தமளிக்கிறது" - போப் பிரான்சிஸ் | Pope Francis Afghanistan Taliban

இந்த பிரச்சினை தொடர்பில் முடிவு கிடைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். வாடிகனில் வாராந்திர வழிபாடு நேற்று நடந்தது அப்போது பேசிய போப் பிரான்சிஸ் "அன்புமிக்க, சகோதர சகோதரிகளே ஆப்கானிஸ்தான் நாடு தொடர்பில் அக்கறை வைத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.

அவர்கள் அமைதி பெற இறைவனிடம் என்னுடன் சேர்ந்து பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்கிறேன். இதன்மூலமாக ஆயுதங்களின் சத்தம் அடங்கி உரையாடலின் மேசையில் முடிவுகள் கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார்.