போப் பிரான்சிஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதி
Pope Francis
Admitted in hospital
By Petchi Avudaiappan
அறுவை சிகிச்சை காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக பெருங்குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். நேற்று வழக்கமான ஞாயிறு வழிபாட்டில் அவர் பங்கேற்றார். அதில் கலந்துகொண்ட மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் ஆசிகளையும் வழங்கினார்.
மேலும் எனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து குடல் பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி ஆஸ்பத்திரியில் போப் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.