போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி : உடல் நலம் குறித்து மருத்துவமனை சொல்வது என்ன ?

Pope Francis
By Irumporai Mar 30, 2023 04:56 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போப் பிரான்சிஸ்

வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி : உடல் நலம் குறித்து மருத்துவமனை சொல்வது என்ன ? | Pope Admitted In Rome Hospital

வாடிகன் அறிக்கை

ஆனால் அதே நேரத்தில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இன்னும் சில நாட்களுக்கு பிரான்சிஸ் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் அதன் பிறகு அவர் சில நாட்கள் ஓய்வுட் எடுப்பார் என்று வாடிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது