காதலனை பிரிந்தார் பிரபல பாடகி : 12 வருட லிவ்-இன் வாழ்வு முடிவுக்கு வந்தது!
ஆங்கில இசை உலகில் பிரபல பாப் பாடகியாக வலம் வருபவர் பாடகி ஷகிரா. சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலான ரசிகர் கூட்டம் ஷகிராவுக்கு உண்டு.
45 வயதான ஷகிரா 35 வயதான ஜெரார்டு பிக் என்ற கால்பந்து வீரரை கடந்த 2010-ம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பை போட்டியின்போது சந்தித்தார். இதனை தொடர்ந்து இவர்களது காதல் தீவிரம் அடைந்த்து.
ஷகிரா-ஜெரார்டு பிக்
ஷகிரா-ஜெரார்டு பிக் ஜோடிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் இதுவரை இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தபடியே இருந்து வந்தனர்.
கடந்த சில காலங்களாக இந்த தம்பதிக்கு இடையே விரிசல் ஏற்பட தொடங்கி ஜெரார்டு காதலி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் வசிக்காமல் பார்சிலோனாவில் தனியாக வசித்து வந்துள்ளார்.
காதல் முறிவு
இந்நிலையில் ஜெரார்டு ஷகிராவை ஏமாற்றியதால் இருவரும் பிரிய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன்படி 12 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவி போல் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளை பெற்ற நிலையில் ஷகிரா - ஜெரார்டு பிக் இருவரும் பிரிந்துள்ளனர்.
இது குறித்து இவரகள் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் பிரிகிறோம் என்பதை உறுதிபடுத்துகிறோம் . எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம், எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
