பூஞ்ச் தாக்குதல் : உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்ட இந்திய ராணுவம்

Indian Army
By Irumporai Apr 21, 2023 05:42 AM GMT
Report

பூஞ்ச் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்ட இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

பூஞ்ச் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது, இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், மற்றும் படுகாயமடைந்த ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பூஞ்ச் தாக்குதல் : உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்ட இந்திய ராணுவம் | Poonch Attack Indian Army

இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் ராணுவ வாகனம் தீப்பிடித்து, 5 வீரர்கள் உயிரிழந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதால், வாகனம் தீப்பிடித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.   

புகைப்படங்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் வியாழக்கிழமை டிரக் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

மேலும், ஹவில்தார் மந்தீப் சிங், லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வால், லான்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய் ஹர்கிரிஷன் சிங் மற்றும் ராஷ்டிரிய ரைபிள்ஸின் சிப்பாய் சேவக் சிங் ஆகியோரின் உயர்ந்த தியாகத்திற்கு வணக்கம் செலுத்துகிறோம் என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.