பாரில் பட்டா கத்தியை சுழற்றி மது பாட்டில்களை துாக்கி சென்ற மர்ம நபர்கள்! துரத்தி பிடித்த போலீசார்
பூந்தமல்லியில் பட்டா கத்தியை சுழற்றி டாஸ்மாக் பாரில் இருந்து மது பாட்டில்களை தூக்கி சென்ற மர்ம நபர்களை சினிமா பாணியில் விரட்டி சென்று கைது செய்தனர் போலீசார்.
பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி பகுதியில் ஒரே இடத்தில் 5 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மாலை 5 வரை மட்டும் செயல்பட அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி இல்லை இந்த நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் உள்ள பார்களில் கள்ள சந்தையில் சிலர் மதுபானங்களை விற்று வந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டா கத்தியை எடுத்து சுழற்றி உள்ளனர் இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர் பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்த ஒரு பெட்டி மது பாட்டில்கள் மற்றும் மதுவை விற்று கொண்டிருந்த நபரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றனர்.
பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி பகுதியில் ஒரே இடத்தில் 5 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மாலை 5 வரை மட்டும் செயல்பட அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி இல்லை இந்த நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் உள்ள பார்களில் கள்ள சந்தையில் சிலர் மதுபானங்களை விற்று வந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டா கத்தியை எடுத்து சுழற்றி உள்ளனர்
இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர் பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்த ஒரு பெட்டி மது பாட்டில்கள் மற்றும் மதுவை விற்று கொண்டிருந்த நபரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை
பறித்துக் கொண்டு சென்றனர்.