உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா அனைவரையும் பிரமிக்க வைத்த பூஜா ஹெக்டே - வைரலாகும் புகைப்படம்

Pooja Hegde
By Nandhini May 19, 2022 06:53 AM GMT
Report

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.

உலகெங்கிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக இதில் ஏ.ஆர்.ரகுமானின் ‘லே மஸ்க்’ படம், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலர், மாதவன் இயக்கி உள்ள ‘ராக்கெட்ரி’ படம், பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவ்விழாவில் வெளியிடப்பட உள்ளது.

முதல்முறையாக இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டுள்ளார். இவர் கோட் சூட் அணிந்து வந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகிகளை தூக்கி சாப்பிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. தற்போது நடந்து வரும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய ஒரு மகுடம் இவருக்கு சூடப்பட்டுள்ளது.

அதாவது, பூஜா ஹெக்டே, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட மூவரையும் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக விமானநிலையத்திற்கு வந்த பூஜாவுக்கு அவரது ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜா நேர்த்தியான உடை அணிந்து கொடுத்த போஸ் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

வைரத் தொங்கல்களை அணிந்து, ஸ்ட்ராப்லெஸ் இறகு கவுனில் கனவு கன்னியாக தோன்றினார் பூஜா ஹெக்டே.

இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.