“ஆடை இல்லாம போட்டொ போடுங்க” என கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை

goes viral pooja hegde insta post fans asks for nudes pooja savage reply
By Swetha 11 மாதங்கள் முன்

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் பழைய இன்ஸ்டா பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஆடை இல்லாமல் போட்டோ போடுங்க எனக் கேட்ட ரசிகர் ஒருவருக்கு நடிகை பூஜா ஹெக்டே தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழில் இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கிய பூஜா ஹெக்டே தன்னுடைய அழகாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

அதே நேரத்தில் தற்போது ஹிந்தி பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கதவை தட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் ரன்வீர், மற்றும் சல்மான் கானுடன் நடிக்க உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் விஜய் திரைப்படத்தின் மூலமாக திரும்பியிருக்கிறார் இவர்.

இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையிலும், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூஜா விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி,

இன்ஸ்டாவில் பதிவிடுவது, ரசிகர்களுடன் லைவ்வில் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவரின் பழைய இன்ஸ்டா பதிவு ஒன்று தான் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

ரசிகர் ஒருவர் பூஜாவிடம் டிரஸ் இல்லாமல் போட்டோவை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு அவர், தனது கால்களின் புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

 “ஆடை இல்லாம போட்டொ போடுங்க” என கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை | Pooja Hegde Savage Reply To Fan Who Asked Her Nude