56 வயதாகும் பிரபல நடிகரை காதலிக்கும் பூஜா ஹெக்டே...? - ஷாக்கான ரசிகர்கள்

Pooja Hegde Salman Khan
By Nandhini 1 மாதம் முன்

56 வயதாகும் பிரபல நடிகரை பூஜா ஹெக்டே காதலிப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூஜா ஹெக்டே

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் ‘முகமூடி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானார். இவர் 2010ம் ஆண்டிற்கான ‘மிஸ் யுனிவர்சு’ அழகிப் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்தார்.

சமீபத்தில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகரான தளபதி நடிகர் விஜய்க்கு ஜோடியாக, நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார்.

கேன்ஸ் திரைப்பட விழா

குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகிகளை தூக்கி சாப்பிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. மேலும், நடந்து முடிந்த 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய ஒரு மகுடம் இவருக்கு சூடப்பட்டது.

அதாவது, பூஜா ஹெக்டே, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட மூவரையும் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக விமானநிலையத்திற்கு வந்த பூஜாவுக்கு அவரது ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்தனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜா நேர்த்தியான உடை அணிந்து கொடுத்த போஸ் இணையதளங்களில் வைரலானது.

pooja-hegde-salman-khan

பிரபல நடிகரை காதலிக்கும் பூஜா ஹெக்டே...?

இந்நிலையில், ‘சர்க்கஸ்’என்ற பாலிவுட் படத்தில் நடித்து வரும் பூஜா, சல்மான் கானுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் சல்மான் கானும், பூஜா ஹெக்டேக்கும் காதலிப்பதாக தகவல் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

மேலும் சல்மான் கானின் தயாரிப்பில் உருவாகும் இரு படங்களில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

56 வயதாகும் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வரும் நிலையில், தற்போது இந்த காதல் விவகாரம் பாலிவுட் வட்டாரங்களில் தீயாய் பரவி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

pooja-hegde-salman-khan