பீஸ்ட் படத்திற்காக ஹாட்டாக சென்னை வந்த பூஜா ஹெக்டே..! வைரலாகும் வீடியோ

beast PoojaHegde
By Irumporai Jul 01, 2021 11:45 AM GMT
Report

பீஸ்ட்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதை தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டது பின்னர் விஜயின் பிறந்த நாளன்று படத்தின் பெயர் ‘பீஸ்ட்’என அறிவித்த படக்குழு, நடிகர் விஜயின் மாஸான 2 போஸ்டர்களையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்த நிலையில்தற்போது தமிழகத்தில் 100 பேருக்கு மிகாமல் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார். தற்போது பூஜா ஹெக்டே புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது