பீஸ்ட் பட நிகழ்வில் நடிகையுடன் குத்தாட்டம் போட்ட அனிருத் - விஜய் பங்கேற்காததால் சர்ச்சை
பீஸ்ட் படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் விஜய் பங்கேற்காத பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வெளியான படங்களின் அனைத்து சாதனைகளையும் தகர்தெறிந்தது. இன்னும் படம் ரிலீசுக்கு சில நாட்களே உள்ள நிலையில் சன் டிவியில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 10 ஆம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
#Beast Telugu Press Meet #PoojaHegde shakes legs for #ArabicKuthu with #Anirudh and #NelsonDilipKumar pic.twitter.com/dVRDPg2nWE
— ???????? ????? (@BheeshmaTalks) April 8, 2022
இந்நிலையில் தெலுங்கில் பீஸ்ட் படத்தை வாங்கி வெளியிடும் தயாரிப்பாளர் தில் ராஜூ பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை பூஜா ஹெக்டே, உட்பட சிலர் மட்டுமே பங்கேற்றனர். குறிப்பாக தளபதி 66 பட பூஜை, திருமண நிகழ்வுகளில் பங்கேற்ற நடிகர் விஜய் பங்கேற்காதது கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, விஜய் குறித்தும், இயக்குநர் நெல்சன் குறித்தும் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அனிருத்தின் தீவிர ஃபேன் நான் என பேசிய பூஜா ஹெக்டே இருவரையும் மேடைக்கு அழைத்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாட வலியுறுத்த அனிருத் சில நடன அசைவுகளை பூஜாவுடன் இணைந்து ஆடி காட்டினார்.