நடுக்கடலில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை - வைரலாகும் வீடியோ
பிரபல நடிகை பூஜா ஹெஜ்டே நடுக்கடலில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் "பீஸ்ட்". இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியானது.
இதனிடையே படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடலை அனிருத், ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் இணையத்தில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பீஸ்ட் ஹீர்ரொயின் பூஜா ஹெக்டே நடனம் இப்பாடலுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நடுக்கடலில் ஒரு படகில் நின்று கொண்டு அவர் போடும் நடனத்தை பார்த்து பாடல் தியேட்டர்களில் மாஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#HalamithiHabibo
— Vijay_The Mass?ⱽⁱʲᵃʸ ᴹᵃᶠⁱᵃ (@MafiaGang2019) February 15, 2022
Lovely @hegdepooja ❤️#ArabicKuthuChallenge#ArabicKuthu #Beast @actorvijayhttps://t.co/kaJdugcxAApic.twitter.com/JpwCpylwAk