விஜய் மீது பொன்ராஜ் பரபரப்பு புகார்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் புகார் அளித்துள்ளார்.
தவெக கட்சியை சேர்ந்த பெண்கள் குறித்து பொன்ராஜ் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜய் டிஜிபி அலுவலத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், தவெகவினர் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் பொன்ராஜ் புகார் அளித்துள்ளார்.
அதில், விஜய்யை எதிர்ப்பவர்களை அவதூறு செய்து அவர்களது குடும்பத்தினரையும் கலங்கப்படுத்தும் Tvk Virtual Warriors குறித்து விஜய் ஒருபோதும் கண்டிக்கவில்லை.
விஜய் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல், ஆதவ் அர்ஜுனா நடத்தி வரும் கால் சென்டர் மூலம் கொலை முயற்சி மிரட்டல் அழைப்புகள் விடுக்கப்படுகிறது.
ரவுடி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
