கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பொன்.ராதாகிருஷ்ணன்
corona
recover
ponradhakrishnan
By Irumporai
பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 5-ஆம் தேதி மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்ட பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தற்போது அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர்.
பொன் ராதாகிருஷ்ணன் கொரோனாவில் இருந்து குணமானதற்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.