பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் தகராறு - செய்தியாளர் மீது தாக்குதல்
பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் தகராறு செய்தியாளர் மீது தாக்குதல் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் செய்தியாளரை பவுன்சர் தாக்கியதால் பரபரப்பு.
பொன்னியின் செல்வன் பட விழா
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் , ஜெயம் ரவி , த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யாராய், சரத்குமார் , கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் மீது தாக்குதல்
செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை அதாவது நேரு உள்விளையாட்டு அரங்கில் வெளிப்புறத்தில் தான் செய்தியாளர்களுக்கு அனுமதி என்று கூறி பவுன்சர்கள் செய்தியாளர் ஒருவரை தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள் பவுன்சர்களை முற்றுகையிட அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.