இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு.. - ரசிகர்கள் ஷாக்...!
இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு தொடுத்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படம்
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்தார்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது. 'பொன்னியின் செல்வன்' படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனைப்படைத்தது.
மணிரத்னம் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். வரலாற்றை திரித்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் மணிரத்னம் மீது சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சுயலாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு தொடுத்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.