‘’சாகசக்கார வந்தியத்தேவன் இதோ ‘’ பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்

Karthi Lyca Ponniyin Selvan: I
By Irumporai Jul 05, 2022 07:35 AM GMT
Report

 கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக லைகாபுரொடக்‌ஷன் தயாரிக்க இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மிரட்டிய ஆதித்த கரிகாலன்

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெட்ராஸ் டாக்கீஸ், ’வருகிறான் சோழன்’ எனும் கேப்ஷனுடன் படம் குறித்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தது.

ஆதித்த கரிகாலனாக கர்ஜிக்கும் விக்ரம் : மிரட்டும் பொன்னியின் செல்வன் போஸ்டர்

அதில் வரும் வாரம் முழுவதும் 'பொன்னியின் செல்வன்' படம் குறித்த அப்டேட்கள் வழங்கப்படும் என்றும், ”சாகசங்கள் நிறைந்த வாரத்துக்குத் தயாராகுங்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று (ஜூலை.04) ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் நடிகர் விக்ரமின் தோற்றம் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது.

வந்தான் சாகசக்காரன்

“சோழ பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம் கடுமையான போர்வீரன். காட்டுப் புலி. ஆதித்த கரிகாலன்!” எனக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், ஒற்றன், சாகசக்காரன்... இதோ வந்தியத்தேவன்!”

எனக் குறிப்பிட்டு கார்த்தி கதாபாத்திர புகைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.