இசை வெளியீட்டு விழாவில் மணிரத்னத்தை கலாய்த்து தள்ளிய நடிகர் ரஜினி... - வைரலாகும் வீடியோ

Rajinikanth Viral Video Ponniyin Selvan: I Mani Ratnam
By Nandhini Sep 07, 2022 06:30 AM GMT
Report

‘பொன்னியின் செல்வன்’ படம்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்காக பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு, நட்சத்திரங்களின் வருகையால் இந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டது. படக்குழுவினருடன் இணைந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ponniyin-selvan-rajinikanth-ponniyin-selvan

வைரலாகும் நடிகர் ரஜினியின் வீடியோ

இந்த இசையீட்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நீண்ட நாட்கள் கழித்து ரஜினியும், கமலும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது, படம் குறித்து முதலில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அவர் பேசுகையில், மணி ரத்னம் எவ்வாறு இயக்குவார் என்று எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும்.

'தளபதி' படத்தில் நான் நடித்த போது அவர் டயலாக் சொல்லிக்கொடுப்பார். எந்த மாதிரி டைலாக் சொன்னாலும் மணிரத்னம் ஒத்துக்கவேயில்ல.. அந்த feel feel மிஸ் ஆகுதுனு சொல்லிட்டே இருப்பாரு.. நம்ம படத்துல எல்லாம் டைலாக் "ஏய் ஏட்றா வண்டிய" அப்டி தான் இருக்கும்.. என்று மணிரத்னம் முன்பே அவரை கலாய்த்து தள்ளினார்.

அப்போது மணிரத்னம், சுஹாசினி உட்பட அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ரஜினியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.