வருகின்றது செழுமை மிக்க சோழத்தேசம் : 2022 வெளியாகிறது பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.
இந்நிலையில், சமீபத்தில் அரண்மனை நகரமான மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சா மற்றும் ஊட்டியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்றன. இந்த நிலையில், தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
PS-1 coming soon! #ManiRatnam #PonniyinSelvan #PS1@LycaProductions @MadrasTalkies_ pic.twitter.com/Tcydh4EvXx
— Trish (@trishtrashers) September 18, 2021
இதனை, புதிய போஸ்டருடன் உற்சாகமுடன் வெளியிட்டுள்ளப் படக்குழு வரும் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.