பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் : தமிழகத்தில் 100 கோடியை கடந்தது பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படம் 100 கோடி ரூபாயை வேகமாக வசூல் செய்துள்ளது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன்
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
கல்கியின் ஆகச்சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படம் நாவலை படித்தவர்கள் மத்தியிலும் சரி, படிக்காதவர்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழகத்தில் 100 கோடி
இதனிடையே, அண்மையில் இந்தப்படத்தின் வசூல் தொடர்பான விவரங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், முதல் நாளில் உலகம் முழுவதும் 80 கோடி ரூபாயையும், இரண்டாவது நாளில் 150 கோடி ரூபாயையும், மூன்றாவது நாளில் 200 கோடி ரூபாயையும் வசூல் செய்தது என அறிவித்தது.
#PS1 ?️ - Breaking records, one at a time! ?✨#PonniyinSelvan1 ?️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/EAJAsRjbhB
— Lyca Productions (@LycaProductions) October 6, 2022
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படமானது தமிழ்நாட்டில் முதல் ஐந்து நாட்களில் 100 கோடி ரூபாயை வேகமாக வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது என்ற அதிகாரபூர்வ தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.