‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு - மகிழ்ச்சி மழையில் நனைந்த ரசிகர்கள்

fans happy ponniyin-selvan announced-date பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
By Nandhini Mar 02, 2022 12:31 PM GMT
Report

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் நடிப்பில் அமரர் கல்கியின் காவியமான பொன்னியின் செல்வன் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு, யாரும் எதிர்பாராத விதமாக இன்று காலையிலிருந்து லைகா நிறுவனம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டு வருகிறது.

வரும் மே 13ம் தேதி சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வெளிவரப்போவதாக லைகா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டது.

இதனையடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் தேதியை சொல்லுங்க என்று டுவிட்டரில் ரசிகர்கள் ஆவலோடு கேட்டு நச்சரித்து விட்டனர்.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் பிரமாண்டமாக உருவாகி வரும் இயக்குநர் மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் PS1 என்று முதல் பாகத்தை அறிவித்து வரும் லைகா நிறுவனம் கேடயத்தை மட்டும் காண்பித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், தனித்தனியாக நடிகை த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோரின் அட்டகாசமான புகைப்படங்களையும் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.