பெயர் மாத்துனது குத்தமா - ஜெயம் ரவி, த்ரிஷா ப்ளூ டிக்கை தூக்கிய ட்விட்டர்!
பெயர் மாற்றிய காரணத்தால் நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வசூலிலும் கோடிகளை அள்ளியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், அக நக, வீரா ராஜ வீர, சிவோஹம், பொன்னியின் செல்வன் ஆந்தம் ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
ப்ளூ டிக்கட்?
தற்போது, படக்குழு ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ட்விட்டரில் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் குந்தவை, அருண்மொழி வர்மன் என்ற பெயரை தங்களது பக்கத்தில் மாற்றி வைத்திருந்தனர்.
இதனால் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. பின்பு மீண்டும் தனது ஒரிஜினல் பெயரை மாற்றியுள்ளார் த்ரிஷா.