Thursday, Jul 3, 2025

இணையதளத்தில் வைரலாகும் ‘பொன்னியின் செல்வன்’ New stills...!

Ponniyin Selvan: I Viral Photos
By Nandhini 3 years ago
Report

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படம்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குந்தவை, நந்தினி செல்பி

சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் குந்தவை, நந்தினியாக நடித்த த்ரிஷாவும், ஐஸ்வர்யா ராய்யும் செல்பி எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

வைரலாகும் New stills

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

ponniyin-selvan-1-viral-photos